Breaking News

யார் இந்த கலீல் அபு அகமது எதற்க்காக YOU ARE A CHAMPION பட்டம் கொடுக்கபட்டது: வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

பஹ்ரைன் நாட்டை சேர்ந்த கலீல் அபு அகமது என்பவர் தன் வாழ்நாளில்  நூற்றுக்கணக்கான அனாதைளுக்கு அடைக்கலமும் ஆதரவும் அளித்து வந்துள்ளார்.   


 

இதனை கேள்விபட்ட  அந்த நாட்டின் மன்னர்  அவரின் மனிதநேயத்தை பாராட்டி YOU ARE A CHAMPION என்ற பட்டத்தையும் விருதையும் புதுமையான முறையில் கொடுக்க நினைத்தார்.   அவருடைய கார் போக்குவரத்து சமிக்கையில் நிற்கும் போது ஆச்சரியப்படும் வகையில் அவருடைய புகைபடத்தை தாங்கிய பதாகைகள் அனைத்து திசைகளிலும் விளம்பரமாக வரும்படி அமைக்கபட்டது.  

அந்த பதாகையில் உங்களை போன்ற முதன்மையிலும் முதன்மையானவர் இதுவரை பிறந்ததில்லை என்ற வாசகம் எழுதபட்டிருந்தது.  

சரியாக அந்த தருணத்தில் வானொலியும் அவருக்கு வாழ்த்து சொல்லும்படி ஏற்பாடு செய்யபட்டிருந்தது.   அவருடைய ஊழியர்களின்  துணைக் கொண்டு யாருக்கும் தெரியமால் காரில்  ரகசிய கேமரா பொருத்தபட்டு அவருடைய அந்த உணர்வு பூரணமான தருணங்கள் படமாக்கபட்டன. 

அனாதைகளின் தந்தை" என்று செல்லப்பெயர் பெற்ற அல் தைலாமி, நூற்றுக்கணக்கான அனாதைகளைக் கவனித்துக் கொள்வதற்காகவும், தனது தொண்டு மூலம் ஏழைகளுக்கு ஆதரவளிப்பதற்காகவும் அங்கீகரிக்கப்படுகிறார்.  

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் பஹ்ரைன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட “யூ ஆர் அவுட்ஸ்டான்டிங்” என்ற நிகழ்ச்சி சமூகத்திற்கு நேர்மறையாகப் பங்களிக்கும் மக்களைக் கொண்டாடும் நிகழ்ச்சியால் சமீபத்தில் அழைக்கப்பட்டவர். அபு அஹ்மத் என்று அழைக்கப்படும் அல் தைலாமி அவர்களில் ஒருவர்.  

நீங்கள் சிறந்தவர். நீங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள்”. அதற்கு பதிலளிக்கும் விதமாக, அவர் கூறுகிறார்: “அனாதைகள் மிகவும் தகுதியானவர்கள். வெளிப்படையாக, நான் இதற்கெல்லாம் தகுதியற்றவன். அல்லாஹ்தான் என்னிடம் தாராளமாக நடந்து கொண்டான். நான் எதுவுமில்லை என்றார்

வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=oEtjqjXayUI

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback