Breaking News

திடீரென சாலையில் இ- பைக் எரிந்ததால் மீண்டும் பரபரப்பு

அட்மின் மீடியா
0

ஓசூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த எலட்ரிக் ஸ்கூட்டர் திடிரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ஓசூர் ஜூஜூவாடி அருகே தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சதீஸ் என்ற இளைஞர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வைத்துள்ளார் 

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக எலக்ட்ரிக் பைக்கை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.திடீரென நடுவழியில் பைக் அடியில் இருந்து புகை வெளியேறியது

உடனடியாக  பைக்கில் இருந்து கீழ் இறங்கி விட்டார் அப்போது பைக் தீப்பற்றி எரியதொடங்கியதுஇதையடுத்து அக்கம் பக்கத்தினர் தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback