பொது இடங்களில் முககவசம் கட்டாயம் – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர்,தலைமைச் செயலாளர்,வருவாய் பேரிடர் நலத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருவதால் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைள் தொடர்பாக தமிழக முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.அப்போது
இனி வரும் வாரங்களில் முதல் மற்றும் இரண்டாம் தவணை,பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.மேலும்,இடங்களிலும்,பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிவது உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக,கொரோனா பரவலை தடுக்க அரசு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்”,என்று கூறியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்