Breaking News

நாடு முழுவதும் நீட் தேர்வு நேரம் நீட்டிப்பு!! முழு விவரம்

அட்மின் மீடியா
0

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் 3 மணி 20 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறுகிறது.

 


ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் பகல் 2 மணி முதல் மாலை 5 :20 மணி வரை நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

200 கேள்விகள் கேட்கப்படும் நிலையில் தேர்வு நேரம் எழுதுவதற்கான நேரம் 200 நிமிடங்கள் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே நீட் தேர்வு எழுத 3 மணி நேரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 20 நிமிடங்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback