Breaking News

ஓடும் பேருந்தில் பாலியல் சீண்டல்..குண்டூசியால் குத்தி ஆதாரத்துடன் வீடியோ எடுத்த இளம் பெண்

அட்மின் மீடியா
0

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம் இரவு 28 வயது இளம்பெண் வழக்கறிஞர் தனது தாயுடன் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்துக்கு அரசு பஸ்சில் சென்றார்.



பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த இளம்பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்தபடி பெண் வக்கீல் இருக்கைக்கு அடியில் கையை நீட்டி தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் ஆவேசம் அடைந்த பெண் வக்கீல்தான் வைத்திருந்த குண்டூசியை எடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரின் கையை குத்தினார். மேலும், அந்த நபரின் கை தனது இருக்கைக்குள் நுழைவதையும் அதை குண்டூசியால் குத்துவதையும் அந்த பெண் வக்கீல் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். 

மேலும், இது பற்றி பஸ் டிரைவரிடம் முறையிட்டுள்ளார்.  உடனே காவல் கட்டுப்பட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது இதையடுத்து, பேருந்தை வானகரம் அருகே நிறுத்தினார். உடனடியாக கோயம்பேடு உதவி கமி‌ஷனர் தலைமையிலான போலீசார் பஸ் நிறுத்தப்பட்டிருந்த வானரகம் பகுதிக்கு விரைந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அவரது பெயர் ராகவன் (40) கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராகவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback