Breaking News

சென்னையில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து ரயில் விபத்து – அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..!

அட்மின் மீடியா
0

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.



சென்னை பீச் கடற்கரை ரயில் நிலையத்திற்கு, பணிமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மின்சார ரயில், நடைமேடையில் மோதி விபத்துக்கு உள்ளானதில், ஓட்டுநர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். 

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் வேகமாக சென்ற ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரேக் சரியாக இயங்காததால், கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி ரயில் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ரயிலில் யாரும் இல்லை எனவும், விபத்தில் ரயில் ஓட்டுநர் மட்டும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 

ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/mv_veeran_/status/1518267105489014784

https://twitter.com/Surendhar_Twitz/status/1518198723141984258

https://twitter.com/I_am_SaiGanesh/status/1518198376617021440

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback