Breaking News

சிகரெட் வடிவ மிட்டாய் விற்றால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

விருதுநகர் மாவட்டத்தில் ஊசி போடும் சிரிஞ்சில் நிரப்பட்ட சாக்லேட் அல்லது சிகரெட் வடிவ மிட்டாய்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்



இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:-

விருதுநகர் மாவட்டத்தில் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் நுகர்வோரைச் சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றது.சமீபத்தில் ஊசிபோடும் சிரிஞ்சில் சாக்லேட் நிரப்பி விற்பதாக பொதுவான தகவல் பத்திரிக்கைகள் மூலம் அறியப் பெற்றதால், மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அவர்களது நகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் உள்ள சந்தேகத்திற்கிடமான கடைகளில் ஆய்வு செய்தனர்.

அவ்வாறு ஆய்வின்போது, சிவகாசி பகுதியில் ஊசி போடும் சிரிஞ்சில் நிரப்பப்பட்ட சாக்லேட் கண்டறியப்பட்டு உணவு மாதிரி எடுத்து உணவு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று சிறுவயதிலேயே புகைப்பிடித்தலை மனதில் விதைக்கும் விதமாக, சிறுவர்களை கவர்வதற்கு சிகரெட் வடிவில் மிட்டாய்கள் விற்கப்படுவது பறிமுதல் செய்யப்பட்டு, உணவு பாகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

ஆய்வறிக்கையின் அடிப்படையில் கடைகளின் மீது வழக்கு தொடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.விருதுநகர் மாவட்டத்தில் எந்தவொரு வணிகராவது ஊசிபோடும் சிரிஞ்சில் சாக்லேட் நிரப்பி விற்றாலோ அல்லது சிகரெட் வடிவ மிட்டாய் விற்றாலோ அவர்களது மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை அளிக்கப்படுகிறது.

பொதுமக்கள், இம்மாதிரியான வித்தியாசமான வகையில் சாக்லேட் அல்லது மிட்டாய் வகைகள் விற்பனை செய்யப்படுவது கண்டறிய நேரிட்டால் 94440-42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது 04562-225252 என்ற மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி அவர்கள் கேட்டுக் கொள்கிறார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback