Breaking News

இனி ஆவின் பொருட்கள் ரேஷன் கடைகளிலும் கிடைக்கும்....அசத்தல் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் இனி ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என  பால்வளத்துறை அமைச்சர் நாசர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்

 


பால்வளம் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என சட்டப்பேரைவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மானிய கோரிக்கை விவாதத்தில் கூறியுள்ளார்.

மேலும் ஆவின் நிறுவனம் பல்வேறு இடங்களில் பால், தயிர், இனிப்பு வகைகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் வரும் காலங்களில் ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என கூறியுள்ளார்.அதேபோல், நுகர்வோரின் தேவைகளை கருத்தில் கொண்டு பத்து வகையான இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback