Breaking News

தமிழகத்தில் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டம் – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. 

 


அப்போது பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், 

விதி எண் 110ன் கீழ் நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் எனவும் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில்  அறிவித்தார்.அதன்படி,

ஜனவரி 26 குடியரசு தினம்,

மே 1 தொழிலாளர் தினம்

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி

மார்ச் 22 தண்ணீர் தினம்

நவம்பர் 1 உள்ளாட்சி தினம் 

உள்ளிட்ட தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்றும் கூறினார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback