Breaking News

பொய்யான தகவல் பரப்பிய 16 யூடியூப் சேனல்களுக்கு தடை- மத்திய அரசு

அட்மின் மீடியா
0

பொய்யான தகவல் பரப்பிய 16 யூடியூப் சேனல்களுக்கு தடை- மத்திய அரசு 



தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தகவல்படி, இந்த யூடியூப் சேனல்கள் இந்தியாவில் பீதியை உருவாக்கவும், வகுப்புவாத ஒற்றுமையை தூண்டவும், பொது ஒழுங்கை சீர்குலைக்கவும் தவறான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்புகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்தியாவை சேர்ந்த 10 சேனல்கள், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 6 யூடியூப் சேனல்களுக்கு இந்தத் தடையை மத்திய அரசு விதித்துள்ளது. 

தேசிய பாதுகாப்பு, இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள், நாட்டில் மத நல்லிணக்கம் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான விஷயங்களில் சமூக ஊடகங்களில் போலி செய்திகளை (Fake News) பரப்புவதற்கு இந்த சேனல்கள் பயன்படுத்தப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback