Breaking News

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கத் தொகை முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி செல்லும் போது இடைநிற்றலை தடுக்க சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.



அரசு  மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.அதற்கு தகுதி உள்ள மாணவர்களின் விவரங்கள் தயார் செய்து அந்தந்த பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்படும். 

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர்களுக்கும் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 

நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றம் அரசு உதவிபெறும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் (சுயநிதிப் பாடப்பிரிவு நீங்கலாக) 10.11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரது எண்ணிக்கை விவரங்களுடன், மாணவர்களின் பெயரிலான வைப்பீடு பத்திரங்கள் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் ( TamilNadu Power Finance and Infrastructure Development Corporation Limited)-ஆல் வழங்கப்பட உள்ளது.

எனவே மேற்படி வைப்பீடு பத்திரத்தில் மாணவ, மாணவியரின் பெயர் மற்றும் விவரங்கள் பதிவு செய்யப்பட வகுப்பு வாரியாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் விவரங்களைக் மாறுபாடு இன்றி  26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மாணவர்களின் தகவல்களை பெறும் போது, எந்த தகவலும் விடுபட்டு விடாமலும், வங்கி கணக்கை சரியாகவும், சேமிப்பு கணக்கு எண். IFSC CODE, MICR NO போன்றவற்றை தெளிவாக குறிப்பிடுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.

எனவே மாணவ மாணவிகள் உங்கள் விவரங்களை உங்கள் பள்ளி ஆசிரியர், அல்லது தலைமை ஆசிரியரிடம் தந்துவிடுங்கள்

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback