தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும் பள்ளி கல்வித்துறை
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என பரவும் தகவல் தவறானது என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அதன்படி,
மே 6 முதல் மே 13-ஆம் தேதிக்குள் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியை போல ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ் நாட்டிலும் அனைவருக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி என்று வெளியான செய்திக்கு பள்ளி கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இறுதி தேர்வு திட்டமிட்டபடி மே 6ஆம் தேதி தொடங்கும். அனைவரும் ஆல் பாஸ் என்று வெளியான செய்தி தவறானது என்றும் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்