மொபைல் மூலம் உங்கள் PF கணக்கில் நாமினி நியமனம் செய்வது எப்படி...முழு விவரம்
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் நாமினியை தேர்வு செய்வது அவசியம். PF பெறும் நபர் இறந்தால், வருங்கால வைப்பு நிதி பணம் அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. அதனால் பிஎப் கணக்குதாரர் குடும்பத்தில் ஒருவரை ஒரு நாமினியாக நியமனம் செய்ய வேண்டும்.அப்போது நீங்கள் எதிர்காலத்தில் உங்கள் பிஎப் கணக்கில் இருந்து கிடைக்கக்கூடிய இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் உட்பட எல்லா பலன்களையும் நாமினி தொடந்து பெற முடியும். மேலும் பிஎஃப் கணக்கில் நாமினி பெயரைச் சேர்ப்பதை தொழிலாளர் வருங்கால வைப்பு கட்டாயமாக்கியுள்ளது.
பிஎஃப் நாமினியைச் சேர்க்காவிட்டால் பிஎஃப் பேலன்ஸ் பார்க்க முடியாது. நாமினி பெயரைச் சேர்த்தால்தான் பிஎஃப் பயன்கள் உங்களது குடும்ப உறுப்பினருக்குக் கிடைக்கும். நாமினியை இணைப்பது குறித்து பிஎஃப் அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.மொபைல் மூலம் ஆன்லைனில் நீங்கள் உங்கள் நாமினியை சேர்த்துவிடலாம்
தேவையான ஆவணங்கள்:-
நாமினியாக தேர்வு செய்யப்படுபவர்கள்
புகைப்படம்,
ஆதார் எண்,
வங்கி கணக்கு எண்,
முகவரி ஆ
கியவை அவசியமாகும்.
ஆன்லைன்மூலம் நீங்கள் பிஎஃப் கணக்கு நாமினியை தேர்வு செய்யலாம். அதற்கான எளிய வழிமுறைகளை காண்போம்.நாமினி நியமனம் செய்யும் முறைகள் (Nominee Appointment Methods)
நீங்கள் முதலில் பி.எப் அதிகார பூரவ இணையதளத்தில் உள் நுழையுங்கள் https://www.epfindia.gov.in/site_en/For_Employees.php
அடுத்து அதில் உங்களுடைய UAN எண் மற்றும் பாஸ்வேர்டு பதிவிட்டு உள் நுழையுங்கள்
அடுத்து அதில் நீங்கள் 'manage' என்ற வசதியில் உள்ள ’E-Nomination’ ஆப்சனை தேர்வுசெய்யுங்கள்
அடுத்து Provide Details --> save கொடுக்க வேண்டும்.
அதன்பிறகு family declaration என்ற வசதியில்'Add family details' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து உங்கள் நாமினி தொடர்பான விவரங்களைப் பதிவுசெய்யலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினியையும் தேர்வு செய்யலாம். அடுத்து நாமினிக்கான பங்களிப்பு தொகை எவ்வளவு என்பதைப் பதிவிட்டு ’save' கொடுக்க வேண்டும்.
அதன் பிறகு
‘E-sign' என்பதை கிளிக் செய்தால் ஓடிபி நம்பர் அனுப்பப்படும். அதைப் பதிவிட
வேண்டும். இப்போது உங்களுடைய நாமினி பெயர் பிஎஃப் கணக்கில்
இணைக்கப்பட்டுவிடும்.
வீடியோவாக பார்க்க:-
Tags: முக்கிய செய்தி