Breaking News

கொரானா கட்டுப்பாடுகளை நீக்கிய சவூதி!!! PCR டெஸ்ட் , தனிமைபடுத்தல் ,முகக்கவசம், கட்டாயமில்லை.. சவூதி அரசு அறிவிப்பு முழு விவரம்....

அட்மின் மீடியா
0

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி அமீரகம், ஓமான் போன்ற நாடுகள் அறிவித்த நிலையில் தற்பொழுது சவூதி அரேபியாவும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




அதன்படி.....

சவுதி அரேபியாவிற்கு வருகைதரும் பயணிகள் இனி கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சவுதி அறிவித்துள்ளது.

சவூதி அரேபியாவிற்கு வரும் பயணிகள் தங்கள் வருகையின் போது PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை எனவும், தனிமைப்படுத்தல் நடைமுறைகள் நீக்கபடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

மசூதிகளில் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இடைவெளியின்றி தொழுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த  அனைத்து நாடுகளுக்கும் இனி நேரடி விமான சேவை தொடங்க அனுமதி

மேலும் சவுதி அரேபியாவில் வெளிப்பகுதியில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றும் பொதுமக்கள் மசூதிகளிலும், உட்புறப் பகுதிகளிலும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெளியிடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை ஆனால் ஷாப்பிங் மால்கள், திரையரங்கம் போன்ற உட்புறங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

அதேபோல் எந்த வகையான விசிட் விசாக்களில் சவூதிக்கு வந்தாலும் பயணிகள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அந்த சிகிச்சைக்கான செலவை ஈடுசெய்யும் மருத்துவ காப்பீட்டைப் பெற்றிருக்க வேண்டும் 

சவுதி உள்துறை அமைச்சகத்தின் இந்த அதிகாரப்பூர்வ கட்டுப்பாடுகளின் தளர்வுகள் மார்ச்  5 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback