Breaking News

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடிய தமிழக முதல்வர் வீடியோ....

அட்மின் மீடியா
0

உக்ரைன் மீது ரஷியா போர்த்தொடுத்து வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள மாணவர்களை ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்தியா மாணவர்களை மத்திய அரசு மீட்டு தாயகம் அழைத்து வருகிறது. 



உக்ரைனில் மருத்துவம் பயின்றுவந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் தாயகம் திரும்பினர்.இந்தநிலையில், தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து முடித்து, நேற்று மாலை மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் திருநெல்வேலி மாவட்டம் ஜோதிபுரத்தில், உக்ரைனில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும் நிவேதிதா, திவ்யபாரதி, ஹரிணி, நவநீத ஸ்ரீராம் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அப்போது மானவ மாணவிகள் உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களை பாதுகாப்பாகத் தமிழகத்திற்கு திரும்பிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதற்காகவும், 

தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் உக்ரைனில் இருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச் செலவுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்றதற்காகவும், 

போரால் பாதிக்கப்பட்டு தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை இந்தியாவில் தொடர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியமைக்காகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தங்களது நன்றியினை தெரிவித்தார்கள்.

மேலும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உக்ரைனில் அவர்களது அனுபவம் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்


https://twitter.com/mkstalin/status/1500864737554227202

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback