ஐரோப்பிய மன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ....உலக நாடுகள் எழுந்து நின்று வரவேற்ப்பு வீடியோ
ஐரோப்பிய மன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ....உலக நாடுகள் எழுந்து நின்று உக்ரைன்
ஐரோப்பா நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில்,
எங்கள் நாட்டுக்காக போராடுகிறோம். எங்கள் நாட்டில் பல நகரங்கள் துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சுதந்திரத்துக்காக போராடுவோம். எங்களை யாராலும் தகர்க்க முடியாது, நாங்கள் வலிமையானவர்கள். உக்ரைன் கொடி அணிந்து இங்கு பலரும் வந்துள்ளார்கள். அதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. உக்ரைனுக்கு பலர் ஆதரவாக இருக்கிறார்கள். உக்ரைன் தொடர்ந்து போராடும்'' மண்ணுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் உக்ரைன் மக்கள் உயிர் தியாகம் செய்து வருகின்றனர். எங்கள் ஒற்றுமையை உடைக்க முடியாது என்று பேசினார்.ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி உரைக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு அளிக்கப்பட்டது.
எங்கள் நிலத்திற்கும், சுதந்திரத்திற்கும் தொடர்ந்து போராடுவோம் என பேசினார். மேலும் நாங்கள் வலிமையானவர்கள், ஏனென்றால் நாங்கள் உக்ரைனியர்கள் என கூறினார்.
https://twitter.com/akash_rathinam/status/1498683205519654917
Whole European parliament applauding for Ukraines president Zelenskyy.
— Akash Munirathinam (@akash_rathinam) March 1, 2022
A leader is born !! #EuropeanParliament #President #Zelenskyy #European #EU #Russia #RussianArmy #Ukraine
pic.twitter.com/jTKrij1na2
Tags: வெளிநாட்டு செய்திகள்