Breaking News

சென்னை கோயம்பேட்டில் தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இளம் பெண் கொலை 3 பேர் கைது நடந்தது என்ன

அட்மின் மீடியா
0

சென்னை கோயம்பேட்டில் தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இளம் பெண் கொலை 3 பேர் கைது நடந்தது என்ன 



சென்னை கோயம்பேட்டில் கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், அனிச்சன்குப்பத்தில் உள்ள ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் யான்சி (18). இவர், அதே பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 வகுப்பு படித்து முடித்துள்ளார். 

இந்நிலையில் நேற்று சென்னை கோயம்​பேட்​டில் பிரபல நட்​சத்​திர ஓட்​டல் இரவு 11 மணி​யள​வில் இரு தரப்​பினர் மது அருந்​தினர். அப்​போது, அவர்​களுக்​குள் நடன​மாடு​வ​தில் தகராறு ஏற்​பட்​டது. 

சிறிது நேரத்​தில் இரு தரப்​பினரும் ஒரு​வர் மீது ஒரு​வர் சரமாரி​யாக தாக்​கிக் கொண்​டனர்.அங்​கிருந்த பவுன்​சர்​கள் இரு தரப்​பினரை​யும் உடனடி​யாக வெளி​யேற்​றினர். 

ஆனால் வெளி​யில் வந்​தும் இருதரப்​பினரும் மோதலில் ஈடு​பட்​டனர். அவர்​களைப் பவுன்​சர்​கள் மீண்​டும் விலக்கி எச்​சரித்து அனுப்​பினர். இந்த மோதலால் நள்​ளிர​வில் மது​பார் மூடப்​பட்​டது. 

மோதலில் ஈடு​பட்​ட​வர்​களில் ஒரு தரப்​பினர் 3 பைக்​கு​களில் அங்​கிருந்து அடுத்​தடுத்து புறப்​பட்​டனர். மற்​றொரு தரப்​பைச் சேர்ந்​தவர்​கள் தாங்​கள் வந்த சொகுசு காரில் கிளம்​பினர்.

இதையடுத்​து, சொகுசு காரை அதிவேக​மாக ஓட்டி எதிர்​தரப்​பினர் மீது மோதினர். இதில், இரு சக்கர வாக​னத்தை ஓட்​டிச் சென்ற 18 வயது இளம்​பெண் தூக்கி வீசப்​பட்டு சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். 

பின்​னால், அமர்ந்​திருந்த 17 வயது சிறுமிக்​கும் பலத்த காயம் ஏற்​பட்​டது. இதையடுத்​து, கொலை​யாளி​கள் அங்​கிருந்து மின்​னல் வேகத்​தில் தப்​பினர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற தலைமறைவு எதிரிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback