Breaking News

கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் - தமிழக டிஜிபி உத்தரவு.

அட்மின் மீடியா
0

கஞ்சா விற்பனையை தடுக்க ஆபரேஷன் கஞ்சா 2.0 எனும் திட்டத்தை தொடவும்  கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி உத்தரவு. 

இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ,அனைத்து மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்

 

  •  கடந்த டிசம்பர் 2021 ஜனவரி 2022 நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக இந்த மாதம் 23.03.2012 முதல் 27.04.2022 வரை ஒரு மாதம் ஆபரேசன் கஞ்சா வேட்டை 2 நடத்தப்பட வேண்டும்
  •  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கீழ்க்காணும் நடவடிக்கைகளை இம்முறையும் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும்.


  • கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது. தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்
  • கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் பதுக்கல் விற்பனை சங்கிலியை உடைக்க மொத்தக் கொள்முதல் விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
  • கஞ்சா குட்கா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி அவர்களை இப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்

 

  • பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களைக் கொண்டு காவல் நிலைய ஆய்வாளர் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி, இரகசியத் தகவல் சேகரிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback