ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த மேலாளர் - உணகத்திற்கு சீல் வைத்த பக்ரைன் அரசு
ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் உணகத்திற்கு சீல் வைத்த பக்ரைன் அரசு அதிகாரிகள்
பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அட்லியா பகுதியில் லாண்டர்ன்ஸ்(Lanterns) எனும் உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்துக்கு வந்த இஸ்லாமிய பெண் ஒருவரை அங்கிருந்த மேலாளர் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையம், சுற்றுலா மற்றும் நிறுவனங்கள் தொடர்பான 1986-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டம் 15-இன் படி உணவகத்தை மூடிவிட்டதாக தெரிவித்துள்ளது. என news of bharain செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த உணவகம் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பஹ்ரைனின் அழகான இராச்சியத்தில் அனைத்து நாட்டினருக்கும் நாங்கள் எவ்வாறு சேவை செய்து வந்துள்ளோம் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் மேலும் பஹ்ரைன் குடிமக்களை "ஒரு நல்லெண்ணச் செயலாக" மார்ச் 29 அன்று உணவகத்தில் இலவச உணவை சாப்பிட அழைத்துள்ளது அந்த ஹோட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது
news source:-
Tags: வெளிநாட்டு செய்திகள்