கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்
கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தவுள்ளனர்.
கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.இந்நிலையில், உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தி யாவசிய விஷயமல்ல. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்' என நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு நடத்தப்படும். கர்நாடகா முழுவதும் கடைகளை அடைத்து அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்" என அறிவித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்