Breaking News

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்பு!

அட்மின் மீடியா
0

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது



உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ஆம் தேதி போர் தொடுத்து இன்றோடு 6 நாளாகின்றது. ரஷ்ய ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலால் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. மக்கள் மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பலர் உயிர் தப்பிக்க உக்ரைனில் இருந்து வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரஷ்யா தற்போது உக்ரைனின் அரசு கட்டிடங்களை குறிவைத்து வானில் இருந்து ஏவுகனைமூலம் தாக்கிவருகின்றது

அந்த வகையில் உக்ரைனில் சிக்கியிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் மேற்கு எல்லையை அடைய எல்விவ் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது, ரஷ்ய குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாக செய்திகள் அதிகாரப்பூர்வமாக  வெளியாகி உள்ளது

கர்நாடக மாநிலம் ஹவேரி சாலகிரியை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா என்பவர் விடுதியில் இருந்து ரயில் நிலையத்திற்கு சென்றபோது இந்த தாக்குதலில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உயிரிழந்த இந்திய மாணவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன் சேகரப்பா கார்கிவ் நகரில் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்துள்ளார். மாணவர் உயிரிழந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.




https://twitter.com/MEAIndia/status/1498591112188989442


Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback