உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போருக்கு ஐநா பொதுச்சபை கடும் கண்டனம்...
ரஷ்யாவின் போருக்கு எதிராக ஐநாவின் இந்த அவசர பொது சபை கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. உலக வரலாற்றில் 11வது முறையாக இப்படி அவசர ஐநா பொதுச்சபை கூட்டம் நடப்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தபட்ட இந்த அவசர கூட்டத்தில்உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு ஐநா பொதுச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைன் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது இது என்று ஐநா பொதுச்சபை விமர்சனம் செய்துள்ளது.
அதே சமயம் உக்ரைனில் நடக்கும் போர் உடனே நிறுத்தப்பட வேண்டும். எனவும் சர்வதேச விதிகளை ரஷ்யா மதிக்க வேண்டும்.என்றும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும். என கூறிய ஐநா பொது சபைவீரர்கள் உடனே தங்கள் எல்லைக்கு செல்ல வேண்டும். தலைவர்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்