சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பு!!! புதிய வைரஸ் கண்டுபிடிப்பு.....
சீனாவில் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள சாங்சுன் நகரில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன
கடந்த 2019- ஆம் ஆண்டுல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. முதல் அலை, இரண்டாம் அலை,மூன்றாம் அலை என பரவி இதன் மூலம் பலகோடி மக்கள் பாதிப்படைந்தும், பல லட்சம் மக்களின் உயிரை காவு வாங்கியது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கொண்டுவந்து தற்போது படி படியாக குறைந்து கொண்டு வந்தது தற்போது.ஒவ்வொரு நாடும் கொரோனா வைரஸின் பிடியிலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன.
இந்நிலையில் சீனாவில் வடகிழக்கில் உள்ள சாங்சுன் பகுதியில் மீண்டும் கொரானா பரவல் அதிகரித்தை தொடர்ந்துசாங்சுன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாங்சுன் நகரில் ஏறக்குறைய 90 லட்சம் மக்கள் வசித்து வரும் பகுதியாகும் மேலும் அங்கு அங்கு தொழிற்சாலைகள் நிறைந்த மக்கள் அதிகம் உள்ள பகுதியாகும்
அங்கு வாழும் மக்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். பேருந்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஷாங்காய் நகரில் அனைத்துப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாங்சுன் நகரில் புதிய வைரஸ் பரவி வருவம் நிலையில் , இந்த வைரஸ் எந்த மாதிரியானது, அதன் பரவும் வேகம் குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
Tags: வெளிநாட்டு செய்திகள்