கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26 ம்தேதி மாபெரும் வேலை வாய்ப்புமுகாம் முழு விவரம்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் , கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், 26.03.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வியியல் முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.
இம்முகாமில் 75-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 5,000 - க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்பப்பட உள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம் (BIO DATA), உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கொரோனா தொற்று நடைமுறை விதிகளான முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டு பயன்பெறலாம்.
வேலையளிப்போரும் மற்றும் வேலை வேண்டுவோரும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 9499055946, 04343-291983 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
எனவே, வேலைநாடுநர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கல்விதகுதி:
8,10,12. ஆம் வகுப்பு
ITI. Diploma.
பட்டப்படிப்பு,
பொறியியல் பட்டதாரிகள்
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்:
26.03.2022 காலை 9 மணி முதல் 4 மணி வரை
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி
வேலை வாய்ப்பில் பங்குபெற முன்பதிவு செய்ய:
மேலும் விவரங்களுக்கு:
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/22203160003
Tags: வேலைவாய்ப்பு