Breaking News

10ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள்- தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், அனைத்து ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நீக்கப்பட்டன. 


தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ரயில் சேவை படிப்படியாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. 

இதையடுத்து அனைத்து ரயில்களிலும் முன்பு போல இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளை முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளாக இயக்கும்படி ரயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது

அதன்படி, நாகர்கோவில், முத்துநகர் , உழவன் விரைவு ரயில்களில் ஏப்ரல் 1-ம் முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும். எனவும்

மேலும், ஏப்ரல் 16-ம் தேதி முதல் நெல்லை ,குமரி , பாண்டியன், பொதிகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 192 விரைவு ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback