TNPSC முக்கிய அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் ஆதார் எண்ணை பிப் 28க்குள் இணைக்க உத்தரவு
அட்மின் மீடியா
0
தேர்வர்களுக்கு TNPSC முக்கிய அறிவிப்புTNPSC இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை வரும் 28-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்
இதுதொடர்பாக,டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.
மேலும் தெரிவு முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டு,தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration – OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை 28.02.2022 ஆம் தேதிக்குள் தவறாமல் இணைத்து எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவு (OTR) கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Tags: வேலைவாய்ப்பு