Breaking News

BREAKING : உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0
BREAKING : உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு
உக்ரைனில் போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது. ரஷ்யா நாளையே போர் தொடுக்கலாம் என அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உருக்கமாக உரையாற்றியுள்ளார். இது நிச்சயம் போருக்கான அறிகுறி தான் என சொல்கிறார்கள் இதனை உணர்ந்து பல்வேறு நாடுகளும் தங்கள் மக்களையும் தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்து வருகின்றனர். 

அந்த வகையில் இந்திய அரசும், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் தங்குவது அவசியமற்றது என்ற சூழலில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் அங்கிருந்து வெளியேறலாம் என்று தெரிவித்துள்ளது. அங்குள்ள இந்தியர்கள் இந்திய தூதரகத்தை அணுகி தங்களின் விவரங்களைப் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியர்கள் உக்ரைன் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback