கொரானா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு விமான கட்டணத்தில் தள்ளுபடி இண்டிகோ அதிரடி அறிவிப்பு
இண்டிகோ விமான நிறுவனம் ‘Vaxi Fare’ என்ற புதிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. கொரானா தடுப்பூசி போட்ட தனது பயணிகளுக்கு டிக்கெட் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதன்படி உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு விமான டிக்கட்டின் அடிப்படை விலையில் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தள்ளுபடி இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வழியாக டிக்கெட் வாங்கப்படும் அல்லது முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே தள்ளுபடி கிடைக்கும்.
அதேபோல் டிக்கெட்டுகள் 15 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:-
Tags: இந்திய செய்திகள்