வேலூரில் பதற்றம்.. மசூதி புதுப்பிக்க எதிர்ப்பு.... முழு விவரம்...
அட்மின் மீடியா
0
வேலூரில் பஜார் பகுதியில் உள்ள சர்க்கார் மண்டித் தெருவில் ஏற்கனவே உள்ள பழைய மசூதியை புதுப்பிப்பதற்க்கு அந்த மசூதி கட்டும் இடத்தை வஃக்பு வாரியத்துக்கு வழங்கி அங்கு மசூதி புதுப்பிப்பு பணி நடந்து வருகின்றது இந்நிலையில் அங்கு இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அங்கு கூடியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் மசூதி கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்களும் ஒன்று திரண்டனர். ஏராளமானோர் அங்கு குவிந்ததால் பதட்டம் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோட்டாட்சியர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அசாம்பவித சம்பவங்களைத் தவிர்க்க வேலூர் மெயின் பஜார் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்