தேர்தல் நாளன்று விடுமுறை எடுக்கும் தொழிலாளர் எவருக்கும் சம்பள பிடித்தம் கூடாது!!தமிழக அரசு
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இம்மாதம் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு நாளன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்று நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளான 19 ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கபட்டுள்ள நிலையில் விடுப்பு எடுக்கும் தொழிலாளர் எவருக்கும் சம்பள பிடித்தமோ சம்பளக் குறைப்போ இருக்க கூடாது எனவும், உத்தரவுகளை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
Tags: தமிழக செய்திகள்