Breaking News

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்த தடை – போக்குவரத்துத்துறை

அட்மின் மீடியா
0

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். 



அரசுப்பேருந்து பயணத்தின் போது ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க போக்குவரத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

அதன் படி பணியின் போது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடத்துநர்கள், பின் இருக்கையில் அமர்ந்து 2 படிகட்டுகளையும் கண்காணிக்கவும் போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தடையை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback