Breaking News

தொடங்கியது போர்!!! உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு!!

அட்மின் மீடியா
0

கடந்த சில வாரங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் ஏற்பட்டு வந்தது என்பதும் இதனை அடுத்து உலக நாடுகள் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.உக்ரைன் நாட்டை தம் வசமப்படுத்த ரஷ்யா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு,ஊடுருவி வருகிறது. இதனால் பதற்றம் நீடித்து வருகிறது.


ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், கிளர்ச்சிப்படை ஆக்கிரமித்த கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய 2 பிராந்தியங்ளை தனி சுதந்திர நாடாக ரஷ்ய அதிபர் புடின் இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். கிளர்ச்சிப்படை ஆக்கிரமித்த பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதாக கூறி அங்கு ரஷ்ய ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்பட்டது.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கக் கூடாது என அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்திருந்தது என்பதும் ஐநாவும் ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் ரஷ்யா மீது ஜப்பான் அமெரிக்கா உள்பட ஒரு சில மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்திருந்தது. இந்த நிலையில் சற்று முன்னர் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது போர் தொடுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டு உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் சில நிமிடங்களில் போது ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அமெரிக்க படைகள் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துமா? இது உலக போராக மாறுமா? என்ன என்பதை பொறுத்திருந்துதான் வேண்டும்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback