Breaking News

போர் பதற்றம்...உக்ரைனில் இருந்து வரும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என மால்டோவா அதிபர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என மால்டோவா அதிபர் அறிவித்துள்ளார். மேலும், எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் என உக்ரைனின் அண்டை நாடான மால்டோவா அறிவித்துள்ளது.



உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகள் மூலம் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இந்நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டோவா நாட்டின் அதிபர் மைய சண்டு உக்ரைன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

ரஷியா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என்று மால்டோவாவின் அதிபர் அறிவித்துள்ளார். மேலும், உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார். 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback