ரஷ்ய அதிபர் புடின் சொத்துக்கள் முடக்கம்- ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!!
அட்மின் மீடியா
0
ரஷ்ய அதிபரின் சொத்துக்கள் முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் மோசமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ள உக்ரைனுக்கு ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் உதவி செய்ய முன்வந்துள்ளன.
இந்நிலையில் விளாடிமிர் புடின் மற்றும் அவரது வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரின் ஐரோப்பா சொத்துகளை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அவர்களுக்கு உள்ள சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் ரஷ்யாவின் நிதி ,ஆற்றல், ஏற்றுமதி துறைகள் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்