தமிழில் பாஸ் செய்தால் தான் போலீசாக முடியும்!: தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆணையம் அறிவிப்பு
தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் காவலராக முடியும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் கூறியுள்ளது.
காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மாற்றம் கொண்டு வந்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் காவலர் எழுத்துத் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
தமிழ் தகுதித் தேர்வு மற்றும் காவலர் எழுத்துத்தேர்வு தலா 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட உள்ளது.தமிழ் தகுதி தேர்வு நடத்தப்பட்டு குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெறமுடியும். இதனால் கடந்த சில நாட்களாக அரசு போட்டித் தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவது தெரிகிறது.
Tags: தமிழக செய்திகள்