Breaking News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விதிகளை மீறி ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெறுகிறது. விறுவிறுவென நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிய இருக்கிறது. 

 


இந்நிலையில், நகர்ப்புற தேர்தல் பரப்புரைக்காக விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்ட அனுமதி அளிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் நகர்ப்புற தேர்தல் பரப்புரைக்காக விதிமுறைகள மீறி போஸ்டர்கள் ஒட்ட அனுமதி தரக்கூடாது எனவும், ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றி அதற்கான அதன் செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback