மறு வாக்குபதிவு நடக்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகத்தில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்றது. சில இடங்களில் வாக்குபதிவின்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் வாக்குபதிவில் குளறுபடிகள் ஏற்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி:-
வார்டு எண் 51 வாக்குச்சாவடி எண் 5059 சென்னை பெசன்ட்நகர் ஓடைக்குப்பம்
வார்டு எண் 179 வாக்குச்சாவடி எண் 1174, வண்ணாரப்பேட்டை 1
மதுரை மாவட்டம்:-
மதுரை திருமங்கலம் நகராட்சி 17 ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 17,
அரியலூர் மாவட்டம்:-
அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி 16 ஆம் வார்டு வாக்குச்சாவடிகள்
16M, 16W,
திருவண்ணாமலை மாவட்டம்:-
திருவண்ணாமலை நகராட்சி 25 ஆம் வார்டு வாக்குச்சாவடிகள் 57M, 57W ஆகிய 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்