Breaking News

ரயில் பயணிகளின் கவனத்திற்கு 3 ரயில்கள் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்

அட்மின் மீடியா
0

ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. 3 எக்ஸ்பிரஸ்களின் டைம் சேஞ்ச் ஆகுதாம் - தெற்கு ரயில்வே தகவல்




இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

மங்களூர் அதிவிரைவு ரெயில் (16159) சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு திருச்சியை 4.40 மணிக்கு வந்தடைகிறது. 15 நிமிட காத்திருப்புக்குப் பிறகு 4.55 மணிக்கு புறப்பட்டு மங்களூர் ரெயில் நிலையத்தை இரவு 7.15 மணிக்கு சென்றடைகிறது.

மலைக்கோட்டை விரைவு ரெயில் (12653) சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு திருச்சி ரெயில் நிலையத்தை அதிகாலை 4.55 மணிக்கு வருகிறது. 

மங்களூர் - புதுச்சேரி வாராந்திர ரெயில் (16858) வரும் மார்ச் 6-ந்தேதி முதல் திருச்சி ரெயில் நிலையத்திற்கு அதிகாலை 5.20 மணிக்கு வந்து 5.30 மணிக்கு புறப்பட்டு விருத்தாசலம் ரெயில் நிலையத்தை காலை 7.20 மணிக்கு சென்றடையும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback