BREAKING 12 வயதிலிருந்து 18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி....
இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசியை 12 வயதிலிருந்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் இந்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த தடுப்பூசியின் முதல் கட்ட சோதனையில் மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு நல்ல பலனை அளிக்கக் கூடியதாக இருந்துள்ளது. இதனால், பயோடெக் நிறுவனம் தனது தடுப்பூசி மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்த நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சிறுவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15- 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மோடி அறிவித்தார். இதனால், 15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட COWIN செயலியில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் மேலும் ஆதார் இல்லாதோர் பத்தாம் வகுப்பு ஐடி கார்டு மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி முன்பதிவு செய்ய:
அடுத்து அதில் பதிவுசெய்ய 'register/sign in yourself'என்பதை க்ளிக் செய்யவும்.
அதில் உங்களது மொபைல் எண்ணை டைப் செய்யவும்.
அடுத்து உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை பதிவு செய்யவும்
அடுத்து அதில் உங்கள் பெயர் , பிறந்தவருடம் மற்றும் ஆதார் கார்டு எண் போன்ற விவரங்களை பதிவுசெய்யுங்கள்
தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடவும் அவ்வளவுதான்
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்