Breaking News

தமிழகம் முழுவதும்…ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் முழு விவரம்....

அட்மின் மீடியா
0

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது பேருந்து, மெட்ரோ ரயில் சேவைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.




ஞாயிறு ஊரடங்கின் போது

  • ஊரடங்கு காலத்தில் பணிக்கு செல்வோர் அலுவலக அடையாள அட்டை மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்


  • ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில்‌ முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்‌. 


  • அத்தியாவசியப்‌ பணிகளான மருத்துவப்‌ பணிகள்‌, மருந்தகங்கள்‌, பால்‌ விநியோகம்‌, சரக்கு வாகனப்‌ போக்குவரத்து மற்றும்‌ பெட்ரோல்‌ டீசல்‌ பங்குகள்‌ போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்‌.

  • பொதுப்‌ போக்குவரத்து மற்றும்‌ மெட்ரோ ரயில்‌ ஆகியவை இயங்காது.


  • ஞாயிற்றுக்கிழமைஅன்று முழு ஊரடங்கின்‌ போது, உணவகங்களில்‌ பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 7.00 மணி முதல்‌ இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌. 


  • உணவு டெலிவரி செய்யும்‌ மின்‌ வணிக நிறுவனங்கள்‌ மேற்சொன்ன நேரத்தில்‌ மட்டும்‌ செய்லபட அனுமதிக்கப்படும்‌. இதர மின்‌ வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.


  • ஞாயிற்றுக்கிழமை மற்றும்‌ வார நாட்களில்‌ இரவு 10.00 மணி முதல்‌ காலை 5.00 மணி வரை விமானம்‌, இரயில்‌ மற்றும்‌ பேருந்துகளில்‌ பயணிப்பதற்காக விமானம்‌, இரயில்‌ மற்றும்‌ பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும்‌ வாடகை வாகனங்களை பயன்படுத்திக்‌ கொள்ள அனுமதிக்கப்படும்‌. அவ்வாறு பயணிக்கும்‌ போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்‌.


  • உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு தனியார் மின்னணு வர்த்தக விநியோக முறையில் மட்டுமின்றி, தங்களுடைய சொந்த விநியோக முறையில் (Own Delivery) மூலமாகவும் உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதியளிக்கப்படும்.


  • முழு ஊரடங்கு நாளான ஞாயிறுக்கிழமையன்று யூ.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள், நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான நேர்முக தேர்வில் பற்கேற்க செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


  • திருமணத்திற்கு செல்பவர்கள் அழைப்பிதழ் காண்பித்து பயணம் செய்யலாம் எனவும், திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback