சென்னையில் மெட்ரோ ரயில்கள் இனி வழக்கம் போல இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
சென்னையில் மெட்ரோ ரயில்கள் இனி வழக்கம் போல இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்;-
இன்று (28.01.2022) முதல் மெட்ரோ இரயில் சேவைகள் வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படும்
மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கம் போல் நெரிசல்மிகு நேரங்களில் காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்
மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
மெட்ரோ இரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட போல் இடைவெளியில் இயக்கப்படும்.
மெட்ரோ இரயில் சேவைகள் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 05:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ இரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்