Breaking News

ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

அட்மின் மீடியா
0

ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்

 


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று சட்டப்பேரவையில் கேள்வி – பதில் நேரத்தின் போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார். 

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் தடை விதித்து முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கமளித்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback