உங்கள் பாதுகாப்புக்காகதான் இந்த கட்டுப்பாடுகள் அனைவரும் கடைபிடியுங்கள்...முதல்வர் வெளியிட்ட வீடியோ....
கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வீடியோ வழியாக விடுத்துள்ள கோரிக்கை
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில்,
இந்த 2022ஆம் ஆண்டு ரொம்ப நல்லா இருக்கும் அப்படிங்கறது தான் நம்ம எல்லோருடைய எதிர்பார்ப்பு, நம்பிக்கை. அப்படி நல்லா இருக்கணும்னா கடந்த ஆண்டு நடந்த பாடங்களை நாம் மறக்கவே கூடாது. முதல் அலை மற்றும் இரண்டாம் அலையில் இருந்து நாம் மீண்டு வந்து இருக்கிறோம். இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது உங்களுடைய முதலமைச்சராக நான் வந்தேன். இந்த அரசின் முதல் வேலை தொற்றை கட்டுப்படுத்துவதாக தான் இருந்தது
கொரோனா வைரஸ் பல உருமாற்றங்களை அடைந்திருக்கிறது. இப்பொழுது ஒமிக்ரான் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதனுடைய வேகம் அதிகம். அதனால் நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த என் தலைமையில் இருக்கக்கூடிய உங்கள் அரசு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
வெளிநாட்டில் இருந்தும் ,பிற மாநிலங்களில் இருந்தும் வரும் பயணிகளுக்கான பரிசோதனை, நம்ம மாநிலத்திற்கான அறிகுறி தெரிந்தால் அதற்கான பரிசோதனை, சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன், மருந்து உபகரணங்கள் ,எல்லாமே போதுமான அளவு இருக்கிறது . கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல முழுமையான ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம். அதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.உங்களுடைய ஒத்துழைப்பு தான் இந்த அரசுக்கு தேவை.
ஒமிக்ரான் பரவலை தடுக்க சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அது உங்கள் பாதுகாப்புக்காக தான். கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளை தயவுசெய்து தவிருங்கள். அவசர தேவைகள் அன்றாட பணிகளுக்காக ,வெளியில் செல்லும் போது போதுமான இடைவெளி கடைபிடியுங்கள். சானிடைசர் பயன்படுத்துங்கள் . இல்லை என்றால் சோப்பு போட்டு கைகளை கழுவுங்கள்,
பொதுவெளியில் முககவசம் அணியுங்கள். அதை எப்போதும் மறவாதீர்கள். பாதுகாப்புக்காக மட்டுமல்ல உங்கள் சார்ந்து இருக்கக்கூடிய அத்தனை பேரின் பாதுகாப்புக்காகவும் தான் இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.
உருமாற்றம் அடைந்துள்ள ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். . தடுப்பூசி முழுமையாக செலுத்தி ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டாலும், அதன் பாதிப்பு வீரியம் குறைவாகவே இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்; எனவே, தவறாது தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் " என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
முதல்வர் வெளியிட்ட வீடியோ பார்க்க:-
https://twitter.com/CMOTamilnadu/status/1477129454811971584
"புத்தாண்டை வரவேற்போம்! கொரோனாவுக்கு விடைகொடுப்போம்" என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார். pic.twitter.com/916yj3oalA
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 1, 2022
Tags: தமிழக செய்திகள்