Breaking News

ஜன.16 அன்று பயணம் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திரும்பி தரப்படும் – போக்குவரத்து துறை

அட்மின் மீடியா
0

 ஜனவரி-16 அன்று பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டு நாட்களில் அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 16-ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. 

எனவே வருகிற ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 16 அன்று பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டு நாட்களில் அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback