Breaking News

10,12, டிகிரி படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்



பணி :-

பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த மற்றும் நிறுவனம் சாரா) 

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் 

ஆற்றுப்படுத்துநர்

சமூக பணியாளர்

கணக்காளர் 

தகவல் பகுப்பாளர் (Data Analyst)

உதவியாளர் (ம) கணினி இயக்குபவர்

புறத்தொடர்பு பணியாளர்


வயது வரம்பு :

40 வயதிற்குள் இருக்க வேண்டும். 


கல்வி தகுதி:


பாதுகாப்பு அலுவலர் பணிக்கு :-

இளங்கலை/முதுகலை பட்டம் (10+2+3 Pattern) சமூகவியல், சமூகபணி, உளவியல், குழந்தை வளர்ச்சி, குற்றவியல் மற்றும் கல்வியியல் ஆகியவற்றில் பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

குழந்தைகள் நலன்/சமூக நலன்/ கல்வி/ தொழிலாளர் ஆகியவற்றில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு:-

B.L / L.L.B (Regular)குழந்தைகள் நலன்/சமூக நலன்/ கல்வி/ தொழிலாளர் ஆகியவற்றில்1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


ஆற்றுப்படுத்துநர் பணிக்கு:-


இளங்கலை/முதுகலை பட்டம் (10+2+3 Pattern) சமூகபணி, உளவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் (Guidance and Counseling – Medical & Psychiatric) ஆகியவற்றில் பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.ஆற்றுப்படுத்துதல் பணியில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சமூக பணியாளர் பணிக்கு:-

இளங்கலை/முதுகலை பட்டம் (10+2+3 Pattern) சமூகபணி, உளவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் (Guidance and Counseling – Medical & Psychiatric) ஆகியவற்றில் பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

குழந்தை தொடர்பான கள பணியில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

கணக்காளர் பனிக்கு:-

B.Com / M.Com (10+2+3) Patternகணக்காளர் பணியில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தகவல் பகுப்பாளர்  பனிக்கு:-

(Data Analyst):B.A / BCA / B.Sc (CS / Statistics / Mathematics) (10+2+3 Pattern)தகவல் தொகுப்பாளர் பணியில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவியாளர் (ம) கணினி இயக்குபவர்:-

10th / SSLC தேர்ச்சி அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் வேண்டும் கணினி சார்ந்த பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

புறத்தொடர்பு பணியாளர் பணிக்கு:-

10,12 ம் வகுப்பு தேர்ச்சி குழந்தை நலன் சார்ந்த சான்றிதழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

 குழந்தை நலன் தொடர்பான கள பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க :-

https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2022/01/2022012088.pdf


தபால் முகவரி:-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

மயிலாடுதுறை 609001 


கடைசி நாள்:-

31.01.2022 


மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2022/01/2022012088.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback