Breaking News

குன்னூரில் விபத்துக்குள்ளான எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டர் சிறப்பம்சங்கள்

அட்மின் மீடியா
0

இந்திய ராணுவத்தின் தலைவராக விளங்குபவர் பிபின் ராவத். விமானப் படை, கடற்படை, தரைப்படை என முப்படைகளுக்கும் இவர் தான் தலைமை தளபதியாக உள்ளார்

மேலும் இவர் ஏற்கெனவே இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருந்திருக்கிறார். இவர் இன்று தனது மனைவியுடன் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நீலகிரியிலுள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரிக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி அவருடன் பாதுகாப்பு கமாண்டோக்கள், விமான ஓட்டிகள் உள்ளிட்ட அதிகாரிகள் என மொத்தமாக 14 பேர் பயணித்துள்ளனர். 

இந்த ஹெலிகாப்டர் இலக்கை அடைய 5 நிமிடத்திற்கு முன்பாகவே மோசமான வானிலை மேகமூட்டம் காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது 

இதனையடுத்து,மீட்பு படையினர் விபத்துக்குள்ளான பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உடல்களை அடையாளம் காணுவதற்காக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 


இதற்கிடையில்,இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்துள்ளதாகவும்,இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இருந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது

விபத்துக்குள்ளான எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டர் சிறப்பம்சங்கள்

தற்போது விபத்திற்க்குள்ளான எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டர் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டது ஆகும்

உலகிலேயே அதிநவீன ஹெலிகாப்டர்களில் இந்த எம்ஐ-17வி 5 ரக ஹெலிகாப்டரும்  ஒன்று. 

எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டரில் எதிரிகளின் இருப்பிடத்தை ராக்கெட் வீசி அழிப்பது, வாகனங்களை அழிப்பது, குறிவைத்து தாக்குதல், நகரும் இலக்குகளை சரியாகத் தாக்குவது போன்றவற்றை இந்த ஹெலிகாப்டர் மூலம் செய்யலாம்.

இந்த எம்ஐ-17வி 5  ரக ஹெலிகாப்டர். 36 ராணுவ வீரர்கள், 4.50 டன் பொருட்களை சுமந்து செல்லும் திறன் படைத்தவை.

இந்த எம்ஐ-17வி 5 ரக ஹெலிகாப்டரில் மணிக்கு அதிகபட்சமாக 250 கி.மீ வேகத்தில் பறக்கமுடியும்

இந்த எம்ஐ-17வி ஹெலிகாப்டரில் படைவீரர்களைக் கொண்டு செல்லுதல், ஆயுதங்களைக் கொண்டு செல்லுதல், தீயணைப்புப்பணி, பாதுகாப்புப் பணி, கண்காணிப்பு, மீட்புப்பணி ஆகியபணிகளுக்கு இந்த ஹெலிகாப்டர் பயன்படும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback