Breaking News

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தேர்தல் தேதி அறிவிப்பு! முழு விவரம்...

அட்மின் மீடியா
0

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 



தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு, நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு பின்வரும் தேர்தல் கால அட்டவணை 03.12.2021 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


வேட்புமனு தாக்கல்

06.12.2021 காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை 

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 

08.12.2021 பிற்பகல் 3.00 மணிவரை 

வேட்பு மனு சரிபார்த்தல் 

09.12.2021 பிற்பகல் 1.00 மணிக்குள் முடிக்கப்படும். 

வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் 

10.12.2021  பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர். 


வேட்பாளர் இறுதிப் பட்டியல் 

13.12.2021


வக்ப் வாரிய தேர்தல்:-

15.12.2021  காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, 


தேர்தல் நடைபெறும் இடம்:-


தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், 

நெ.1. ஜாபர்சிராங் தெரு,

வள்ளல் சீதக்காதி நகர், 

சென்னை-600 001


தேர்தல் முடிவுகள் 16.12.2021 அன்று வெளியிடப்படும்.” என்று அறிவிக்கபட்டுள்ளது.


மேலும் விவரங்களுக்கு:-


https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr021221_t_1251.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback