வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக அரசின் ஆப் அறிமுகம்
அட்மின் மீடியா
0
பள்ளி கல்வித்துறை இயக்ககம் சார்பில் போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு செய்தி குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள ‘உங்கள் நூலகம் உள்ளங்கையில்’ என்ற ‘செல்போன் செயலி’ உருவாக்கப்பட்டுள்ளது. இதனை செல்போன் ‘பிளே ஸ்டோரில்’ சென்று ‘டவுன்லோடு’ செய்து கொள்ளலாம்.
5-ம்வகுப்பு தேர்ச்சி முதல் பி.எச்.டி., வரை பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் உட்பட 147க்கும் அதிகமான படிப்புகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது.
ஒருமுறை விபரங்களை பதிவு செய்தவருக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு தகவல் ‘நோட்டிபிகேஷனாக’ அனுப்பி வைக்கப்படுகிறது.
போட்டி தேர்வு, வேலைவாய்ப்பு குறித்த அதிகாரப்பூர்வ, சமீபத்திய தகவல்களை இந்த செயலியில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
வேலை தேடும் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் செயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆப் டவுன்லோடு செய்ய:-
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு