பள்ளி கல்லூரி முதல் அரசு அலுவலகம் என அனைத்தும் இனி தமிழில்தான் இனிஷியல் தமிழக அரசு அரசாணை வெளியீடு
பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதும்போது முன் எழுத்தை தமிழில் எழுத தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத ஆணை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
2021-2022-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை 46-இன் போது தொழில் துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்கண்ட அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.
தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையைப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் பொதுப் பயன்பாடுகளில் இம்முறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படும்”, என்று அறிவித்தார்.
அதன்படி, அரசின் கவமான பரிசீலனைக்கு பின் 2021-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில் இடம்பெற்ற அறிவிப்பினை செயல்படுத்த ஏதுவாக, தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்களின் கருத்துருவினை ஏற்று தமிழ் ஆட்சிமொழி சட்டத்தினை முழுமையாக செயற்படுத்தும் பொருட்டு பின்வருமாறு ஆணையிடலாம் எனக் கருதி அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.
முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பம் இடவும், அதில் முன்னெழுத்துகளையும் தமிழிலேயே எழுதப்பட வேண்டுமாறு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை மீண்டும் வலியுறுப்படுகிறது.
தொட்டில் பழக்கம் எனத் தொடங்கும் பழமொழிக்கேற்ப மாணவர்களின் தொடக்க கல்வி முதல் கல்லூரி காலம் வரையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு தமிழை முதன் முதலில் மாணவர்களது பெயரில் சேர்ப்பது சிறப்பானதாக அமையும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பெயர் எழுதும் போது அதன் முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையினை அன்றாட வாழ்வில் கொண்டு வர மாணவர்கள் பள்ளிக்கு சேரி அளிக்கும் விண்ணப்பம் வருகை பதிவேடும் பள்ளி, கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரையில் அனைத்திலும், தமிழ் முன்னெழுத்துடனே வழங்கும் நடைமுறையினை கொண்டு வரவும் மேலும் மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுறுக்கப்படுகிறது.
தலைமைச் செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை அனைத்து அரசுத் துறைகளிலும் வெளியிடப்படும் ஆணைகள் மற்றும் ஆவணங்கள் பொதுமக்களின் பெயர்கள் குறிப்பிடும் போது முன்னெழுத்துகள் உட்பட பெயர் முழுமையையும் தமிழிலே பதிவு செய்யப்பட அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் அரசு துறைகளில் பெறப்படும் விண்ணப்பங்களிலும் தமிழ் முன்னெழுத்துடன் கையொப்பத்தினையும் தமிழிலேயே இடுமாறு பொது மக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொது மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொது மக்கள் பார்வையில்படும் வகையில் தமிழின் பெருமையை சுட்டிக்காட்டியும் முன்னெழுத்தும் தமிழில் கையொப்பமும் தமிழில் கையொப்பமிடுவதை பெருமிதப்படுத்தும் வகையில் தெரிவிக்கப்பட்டவாறு சுவரொட்டிகள் அமைத்து நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
இந்த அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிஷியல் இனி தமிழில்தான் இருக்க வேண்டும் - அரசாணை வெளியீடுPublished on: 28 minutes agoபள்ளி, கல்லூரி, அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது, முன்னெழுத்தையும் (initials) தமிழிலேயே எழுத ஆணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை 2021 விவாதத்தின்பொழுது பள்ளி, கல்லூரி, அரசு ஆவணங்களில் பெயரினை எழுதும்பொழுது பெயர் மட்டும் அல்லாது, பெயரின் முன்னெழுவதையும் (initials) தமிழிலேயே எழுத ஆணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.உத்தரவின் முக்கிய அம்சங்கள்முதலமைச்சர் முதல் கடைநிலை அரசு ஊழியர்கள் வரை தமிழிலேயே கையெழுத்திடவும் ஏற்கனவே ஆணை பிறப்பித்துள்ளது, முன்னெழுவதையும் தமிழிலேயே எழுத அறிவுறுத்தப்படுகிறது.தொட்டில் பழக்கம் எனத் தொடங்கும் பழமொழிக்கேற்ப மாணவர்களின் தொடக்கக் கல்வி முதல் கல்லூரி காலம் வரையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும்பொருட்டு தமிழை முதன்முதலில் மாணவர்களது பெயரில் சேர்ப்பது சிறப்பானதாக அமையும்.பள்ளி கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பெயர் எழுதும்போது அதன் முன்னெழுவதையும், தமிழில் எழுதும் நடைமுறையினை அன்றாட வாழ்வில் கொண்டுவர மாணவர்கள் பள்ளிக்குச் சேர அளிக்கும் விண்ணப்பம் வருகைப்பதிவேடு பள்ளி கல்லூரி முடித்துப் பெறும் சான்றிதழ் வரையில் அனைத்திலும், தமிழ் முன்னெழுத்துடனே வழங்கும் நடைமுறையினைக் கொண்டுவரவும், மேலும் மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுறுத்தப்படுகிறது.தலைமைச் செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை, அனைத்து அரசுத் துறைகளிலும் வெளியிடப்படும் ஆணைகள், ஆவணங்களில் பொதுமக்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது முன்னெழுத்துகள் உள்பட பெயர் முழுமையையும் தமிழிலேயே பதிவுசெய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அரசுத் துறைகளில் பெறப்படும் விண்ணப்பங்களிலும் தமிழ் முன்னெழுத்துடன் கையொப்பத்தினையும் தமிழிலேயே இடுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வையில்படும் வகையில் தமிழின் பெருமையைச் சுட்டிக்காட்டியும், தமிழில் கையொப்பமும், தமிழில் கையொப்பமிடுவதைப் பெருமிதப்படுத்தும்வகையில் சுவரொட்டிகள் அமைத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.மேலும் அரசின் உத்தரவு உடனே நடைமுறைக்கு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்