Breaking News

இந்து மததிற்கு மாறினார் முன்னாள் மத்திய வக்பு வாரிய தலைவர் வாசீம் ரிஸ்வி

அட்மின் மீடியா
0

உத்தர பிரதேச ஷியா மத்திய வக்ப் வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசீம் ரிஸ்வி இந்து மதத்துக்கு மாறியுள்ளார். மேலும் தான் இறந்த பிறகு உடலை புதைக்கக்கூடாது, இந்து முறைப்படி தகனம் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்


உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள தாஸ்னா கோவிலின் இந்து சமய நெறியாளர் நரசிம்ம ஆனந்த சரஸ்வதி என்பவரால் இந்து மதத்துக்கு மாறினார் என கூறப்படுகிறது. வாசீம் ரிஸ்விக்கு ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி என புதிய பெயரிடப்பட்டுள்ளது.

இவர் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் அயோத்தி வழக்கில் ராமர் கோயிலுக்கு ஆதரவாக பேசினார்.  மேலும் திருக்குர்ஆனின் 26 பக்கங்களில் கூறப்படும் கருத்துகள் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் அவற்றை நீக்கவும் கோரி கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தில் ரிஜ்வீ தொடர்ந்த வழக்கால் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ரிஜ்வீக்கு ரூ.50,000 அபராதமும் விதித்தது. 

வீடியோ

https://www.youtube.com/watch?v=wxKuq4sgwl8

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback